• Home
  • /
  • Books & E-Books
  • /
  • முறிந்த வானவில் / MURINTHA VAANAVIL: கவிதைகள் (Tamil Edition)
₹ 60

Validity

Till Further Changes

Seller

Active Deal

முறிந்த வானவில் / MURINTHA VAANAVIL: கவிதைகள் (Tamil Edition)

மலரினும் மெல்லிது குறுங்கவிதை. சிலர் அதன் செவ்வி தலைப்படுவார். அந்த ஒரு சிலரில் கவிஞர் கோ.வசந்தகுமாரனின் இடம் மிக முக்கியமானது. குறுங்கவிதை எழுதுவதற்குப் பாலைச் சுண்டக் காய்ச்சுவதுபோல பதமான ஒரு மொழி தேவை. சொற்களின் எடை அல்லது எடையின்மை குறித்த தெளிவு மிக முக்கியம். தாங்க முடியாத சுமை ஏற்றப்பட்ட ஒட்டகத்தின் முதுகில் ஒரு சின்ன வைக்கோல் துரும்பை அதிகமாகப் போட்டால்கூட ஒட்டகம் நிலை குலைந்து உட்கார்ந்து விடும். குறுங்கவிதையிலும் இப்படித்தான். கோ.வசந்தகுமாரன் தனது கடந்த 30 ஆண்டுக் காலமாகக் கவிதைப் பிரதேசத்தில் சஞ்சரித்து வரும் இலக்கிய அனுபவத்தாலும், கவியரங்கங்கள் பல கண்டு கைதட்டு வாங்கிய அனுபவத்தாலும் எதை எப்படிச் சொல்ல வேண்டும் எனும் நுட்பம் தெரிந்தவர். இதற்கு இவரது இந்த “முறிந்த வானவில்” தொகுதியே சாட்சி.

இந்திரன்,
கலை இலக்கிய விமர்சகர்


Steps to Get முறிந்த வானவில் / MURINTHA VAANAVIL: கவிதைகள் (Tamil Edition).