• Home
  • /
  • Books & E-Books
  • /
  • புதையலும் புதைகுழியும் : A HUMOROUS SHORT STORY (Tamil Edition)
₹ 70

Validity

Till Further Changes

Seller

Active Deal

புதையலும் புதைகுழியும் : A HUMOROUS SHORT STORY (Tamil Edition)

"புதையலும் புதைகுழியும்" நகைச்சுவை கலந்த மற்றும் சமூகத்தின் பார்வையில் ஒரு அனுபவத்தின் சிறுகதை. மேலும் இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. படித்து மகிழ்க…நன்றி.

புதையலும் புதைகுழியும்…………

இடம் : மொட்டைபாஸ் வீடு..

நபர்கள்: மொட்டை மற்றும் அவரது அசிஸ்டன்ட்டுகள்…

அன்று கொள்ளைக்காரர்களுக்கான ரகசியக்  கூட்டம்… கொள்ளைக் கூட்டத் தலைவன் """மொட்டை பாஸ்"" தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் புதியதாக இரண்டு அடியாட்கள் வந்திருந்தனர்..(மொத்தத்திலே இரண்டு அடியாட்கள்  தான் )
அவன் பேசத் தொடங்கினான்…

இன்னிக்கு ராத்திரி நம்ம ஊரு "ஜல்ஸாக் கோட்டையில" உள்ள "புதையலை"  நாம எல்லாரும் கொள்ளை அடிக்கப் போறோம்… என்னடா,  யாருக்காவது பயமா இருக்கா?….

(அடியாள் அங்குச்சாமி குறுக்கிட்டான் )

அங்குச்சாமி : பயமா இல்ல பாஸு, ஒரே பசியா இருக்கு…சுகர் பேஷண்ட் வேற மாத்திரை போடணும்…..

மொட்டை பாஸ் : "சுகர் வந்தவன், சுக்குக் காப்பி போடுறவன்" எல்லாம் கொள்ளையடிக்க வந்தால் நான் கொலை கேஸுலதான்டா  உள்ள போகணும்….

வேற யாருக்காவது எதாவது சந்தேகம் இருக்கா?….

(மற்றொரு அடியாள் மொக்கச்சாமி குறுக்கிடுகிறான்)…

பாஸ் இந்த சின்ன வேலைக்கு நீங்க எதுக்கு நானே பார்த்துகிறேன்…

மொட்டை பாஸ் : இப்படித்தான் உன்கிட்ட  ஒருநாள் எனக்கும் வயசாகிட்டேப் போகுதுன்னு சொன்னேன்…

அதுக்கு நீ.. ஊரெல்லாம் "எங்க பாஸ் வயசுக்கு வந்துட்டாரு" ன்னு  போஸ்டர் அடிச்சு ஓட்டிட்ட…ஊருக்காரன் அத்தனை பேரும் எனக்கு சடங்கு வைக்கிறேன்னு சமையக்கட்டு வரைக்கும் வந்துட்டான்…..

மொக்கச்சாமி : அப்போ பாஸ் எனக்குத்தான அந்த வேலையக் குடுக்கப் போறீங்க?…

மொட்டை பாஸ் : உனக்கும் குடுக்க முடியாது…. அவனாவது எனக்கு போஸ்டர் அடிச்சுதான் ஒட்டினான்…

ஆனால் நீ… ஒருநாள் லேசா வயிறு வலிக்குதுன்னு சொன்னேன்.. அதுக்கு நீ,  எங்க பாஸு "அப்பாவாகப் போறாருன்னு ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணிட்டே" அவன் கூட்டிட்டுப் போய் எனக்கு பிரசவமே பார்த்திருப்பான்…


Steps to Get புதையலும் புதைகுழியும் : A HUMOROUS SHORT STORY (Tamil Edition).