கரை சேர்ப்பாய் காதலே: மனதின் மௌன மொழி (Tamil Edition)
(மனதின் மௌன மொழி)
மனதின் மந்திர மொழியாய் காதல் ..
ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் உண்டு
காதலை வென்றவர்க்கும் தனித்தே நின்றவர்க்கும் ..
அரும்பும் வயதில் உள்ளத்தில் துளிர்த்த காதலை
பூவாய் வளர்த்தவர்களும்,
மொட்டாகவே சிதைத்தவர்களும்
இல்லாமல் இல்லை இந்த உலகில் .
காதலுக்கு வயதில்லை
காதலும் வயதுக்குள் அடங்குவதில்லை .
சூழ்நிலையும் காலமும்
சேர்த்திடாத காதலை
நினைவுகளால் வாழ்ந்து பார்த்து
மகிழ்ந்தவர்களின் அனுபவங்கள்
இதயத்தின் ஆழத்தில் நிழலாடும்
நினைவுகளாய்
அலையில் மென் தழுவலோடு
இதயத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
சூழலை தனதாக்கிட
காத்திருந்து கைசேர்ந்தவர்களுக்கும்
தவிப்புகள் நினைவுகளாய் எழுகிறது.
அந்த வகையில் காதலின்
அதிஅற்புதமான தருணங்களை
எழும் உணர்வுகளை
காத்திருப்பின் வலிகளை
கை சேரும் தவிப்புகளை
என காதலை வென்றவர்களும்
காதலில் நின்றவர்களும்
கொண்டாடி மகிழும்
உணர்வுகளின் குவியலை
இதயத்தின் மௌன மொழியை
வார்த்தையால் உங்களுக்கு படையலாக்கி
உங்கள் நினைவுகளை கண்முன் காட்டி
உங்களை காதலின் குளத்தில்
வலியின்றி மூழ்கவிட்டு மகிழ்விக்கும்
இந்த காட்சிக்கவிதைகள்..
இப்படிக்கு காதல்
Steps to Get கரை சேர்ப்பாய் காதலே: மனதின் மௌன மொழி (Tamil Edition).
- Visit கரை சேர்ப்பாய் காதலே: மனதின் மௌன மொழி (Tamil Edition)
- Add to your cart.
- Login / Register
- Select / Update Shipping Details
- No Apply Coupon Required.
- Offer Validity: